Thursday, 26 March 2015

ஜெ., வழக்கு: அரசு தரப்பில் பவானி சிங் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம்??


இந்தியா முழுவதும் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு. கர்நாடக நீதிமன்றத்தில் இறுதில் இறுக்கும் இந்த வழக்கிற்க்கு தீர்ப்பு மட்டும் வர வேண்டும்.
ஆனால் இதற்கிடையில், தி.மு.க., பொதுச் செயலாளர் க. அன்பழகன் உச்சநீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்றக் கோரி மனு கொடுத்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி மதன்லோகுர் முன்னிலையில் நடந்தது.
இதன் போது, கர்நாடக அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞர் எம்.என்.ராவ் விளக்கம் அளித்துள்ளார். க.அன்பழகன் சார்பில் வழக்கறிஞர் அந்தியார்ஜுனா வாதம் செய்தார்.
ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பில் பவானி சிங் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பவானி சிங் செயல்படுவதாகவும், உயர்நீதிமன்றத்தில் ஆஜராக பவானி சிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை என்றும் அன்பழகன் சார்பில் ஆஜரான அந்தியர்ஜுனா வாதிட்டார்.
மேலும் ஜெயலலிதா வழக்கில் அரசு சார்பில் பவானி சிங் ஆஜராக எந்த முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா பவானி சிங்கிற்கு அபராதம் விதித்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
குற்றவாளி தரப்பிலிருந்து, பவானி சிங்கை எதிர் தரப்பில் வாதிடக் கோரியது தவறு என்றும், இவ்வாறு அரசு தரப்பில் குறிப்பிட்ட ஒருவரை நியமிக்க குற்றவாளி கோருவது சட்டவிரோதம் என்றும் அன்பழகன் சார்பில் ஆஜரான அந்தியர்ஜுனா வாதிட்டார்.

No comments:

Post a Comment