Friday, 1 May 2015

உள்ளாடைகளைத் திருடும் நபரை தேடும் அமெரிக்கப் போலீஸ்…!!


அமெரிக்காவில் கடைகளுக்குள் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை திருடும் நபரை தேடி வருகின்றனர். பென்சில்வேனியா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மூன்று திருட்டுச் சம்பவங்களில் சுமார் 150 பிராக்கள் திருடப்பட்டிருந்தன.
இது தொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த வாரம் மற்றொரு உள்ளாடை விற்பனை நிலையத்திலும் 25 பிராக்கள் திருடப்பட்டுள்ளன. இந்த உள்ளாடை திருட்டு நடவடிக்கை ஒரு குழுவினால் மேற்கொள்ளப்படுகிறதா அல்லது தனியொரு நபரினால் மேற்கொள்ளப்படுகிறதா என்பது உறுதியாகத் தெரியவில்லை என போலிஸார் கூறுகின்றனர்.
இவ்வாறு பிராக்கள் மட்டும் திருடப்படுவதற்கான காரணமும் கண்டறியப்படவில்லை. திருடப்பட்ட பிராக்களின் மொத்தப் பெறுமதி 7,700 டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment