Thursday, 28 May 2015

நடிகர் சங்கத் தேர்தல்: வேட்டையை தொடங்கிய விஷால்...!


நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறப்பதை ஒட்டி தேர்தலுக்கான வேட்டையை ஆரம்பித்துள்ளார் நடிகர் விஷால். சினிமா நடிகர்களை விட நாடக நடிகர்களின் வாக்குகளை பெற்றால் தான் பொறுப்புக்கு வர முடியும் என்பது பலருடைய கருத்து. அதனால் நாடக நடிகர்களை தன் பக்கம் இழுக்கும் வேலையை தொடங்கிவிட்டார் விஷால்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் ஒவ்வொரு ஊராகச் சென்று நாடக நடிர்களை சந்திப்பேன் என்று கூறியிருந்தார். அதன்படி நேற்று புதுக்கோட்டை சென்ற விஷால் அங்கு முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தினரை சந்தித்துப் பேசினார்.
"திரைப்பட நட்சத்திரங்கள் நாடக நடிகர்களுக்கு உரிய மதிப்பையும், கவுரவத்தையும் கண்டிப்பாக வழங்குவார்கள். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" என்று அவர்களுக்கு உறுதி அளித்தார். முன்னதாக நாடக நடிகர்கள் விஷாலுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய விஷால் "எம்.ஜி.ஆர், சிவாஜி, போன்றவர்களின் உழைப்பில் உருவான நடிகர் சங்கத்து சொத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதை ஒரு போதும் ஒத்துக் கொள்ள முடியாது. திருமண மண்டபம், திரையரங்கத்துடன் கூடிய புதிய சங்கத்தை கட்ட வேண்டும். நடிகர் சங்க உறுப்பினர்கள் இலவசமாக அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது தவிர்க்க முடியாததாகிவிடும். நான் இங்கு வாக்கு சேகரிக்க வரவில்லை. நாடக நடிகர்கள் என்னை பார்க்க விரும்பினார்கள். அதற்காகவே வந்தேன்" என்னார்.
புதுக்கோட்டையைத் தொடர்ந்து திருச்சி, தஞ்சாவூர், சேலம், மதுரைக்கும் செல்ல விஷால் முடிவு செய்துள்ளார். கணிசமா அளவு நாடக நடிகர்கள் இந்த மாவட்டங்களில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஷாலுடன் நடிகர் கருணாஷும் உடன் செல்கிறார்.

No comments:

Post a Comment