Wednesday, 27 May 2015

நஷ்டத்தை ஏற்படுத்திய கமல்.. பறிதவிக்கும் விஜய்


தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகரான விஜய் சேதுபதி தற்போது ஆரஞ்சு மிட்டாய், மெல்லிசை, இடம் பொருள் ஏவல், நானும் ரவுடி தான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இடம் பொருள் ஏவல் படம் எப்போதே ரிலீஸாக வேண்டியது. ஆனால் இன்னும் ரிலீஸாகவில்லை. அதற்கு கமல் தான் காரணம் என்ற ஒரு பேச்சு அடிப்படுகிறது.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் முதல் முறையாக யுவன் சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டதாம். இருந்தும் ஏன் ரிலீஸாகவில்லை. படம் தாமதமாவதற்கு என்ன காரணம் எனக் கண்டறிந்த போது சில தகவல்கள் கிடைத்துள்ளது.. கிடைத்த தகவல்கள் இதோ உங்களுக்காக… லிங்குசாமி தயாரித்த கமலின் ‘உத்தம வில்லன்’ பட வெளியீட்டின் போது எழுந்த சில பிரச்சினைகளால் தனது மொத்த பணத்தையும் லிங்குசாமி முதலீடு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் ‘உத்தமவில்லன்’ படம் எதிர்பார்த்த அளவு லாபத்தை திருப்பி தராததால், செய்வது அறியாமல் விழித்து கொண்டிருக்கிறார் லிங்குசாமி. இந்நிலையில் விஜய்சேதுபதியின் தற்போதைய மார்கெட் வேல்யூ ரூ. 5 கோடியை தாண்டினாலும் தென்மேற்கு பருவக்காற்றில் தன்னை அறிமுகப்படுத்திய சீனுராமசாமிக்காக மிகக் குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். இருந்தும் அந்த சம்பளத்தையே முழுமையாக தர முடியாததால் டப்பிங் பேச மறுத்துவிட்டாராம் விஜய் சேதுபதி.
ஆனால் தற்போது தயாரிப்பாளர் லிங்குசாமியின் நிலையை உணர்ந்த விஜய்சேதுபதி 50 லட்சத்தையும் வேண்டாம் என்று தள்ளுபடி செய்துவிட்டாராம். அதோடு தனக்கு நெருக்கமான சிலரிடம் கமல் நடித்த உத்தம வில்லன் படத்தால் தனக்கு 50 லட்சம் நஷ்டமாகிவிட்டதே என்று புலம்பி வருகிறாராம்.

No comments:

Post a Comment