Saturday, 30 May 2015

பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவது எதனால்!?


பாம்புக்கு முட்டை, பால் வைப்பது நமது முன்னோர்கள் காலத்திலிருந்து ஒரு வழக்கமாக இருக்கிறது. பாம்புக்கு பால், முட்டையும் வைத்தால் அது நம்மை தொந்தரவு செய்யாது என்று தான் கேள்விப்பட்டுள்ளோம்.
ஆனால், உண்மையில் பாம்பு பால் அல்லது முட்டை ஆகியவற்றை உண்ணாது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. பாம்புகள் ஆதிமுதலே மனிதர்களுக்கு பிரச்சனையாகவே இருந்து வந்தது. சமய நெறிமுறைகள் பின்பற்ற ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இந்து சமய முறைப்படி உயிரினங்களை கொல்வது பாவமாக கருதப்பட்டது.


இதனால், அவர்களால் பாம்புகளை கொல்ல முடியவில்லை. மாறாக அவற்றின் இனப்பெருக்கத்தினை தடுக்க முடியும்.
பாம்புகள் இனப்பெருக்கம் செய்யும் முறை சற்றே வித்தியாசமானது, பெண் பாம்பின் மீது ஏற்படும் ஒரு வகை வாசனையை வைத்தே ஆண் பாம்பானது இனப்பெருக்கத்திற்கு கவரப்படுகிறது.
பால் மற்றும் முட்டையானது இந்த வாசனையை ஆண் பாம்பு நுகரவிடாமல் தடுக்கிறது, இதனால் அதன் இனப்பெருக்கம் குறைகிறது. புற்றில் பால் மற்றும் முட்டை ஊற்றும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது இதனால் தான்.
பாம்பு பால் மற்றும் முட்டை குடிக்காது என்பதே நிரூபிக்கப்பட்ட உண்மை.

No comments:

Post a Comment