Saturday, 30 May 2015

சிவகார்த்திகேயனுக்கும், அஞ்சலிக்கும் நெருக்கமா..? சிக்கிய புகைப்படம்..?


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கும், நடிகை அஞ்சலிக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இருவரும் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த சில நாட்களாக ஒன்றாக தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்து செல்பி எடுத்துக் கொண்ட படமும் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடம்பாக்கத்தில் இந்த காதல் கிசுகிசு விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவகார்த்திகேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர். தொலைக்காட்சியில் இருந்து இருந்து சினிமாவுக்கு வந்து முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கிறார். தற்போது அவர் ரஜினிமுருகன் படத்தில் நடித்து வருகிறார்.
அஞ்சலி, சித்தியுடன் சண்டை போட்டு சில மாதங்கள் தமிழ் படங்களில் தலைகாட்டாமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தான் ஜெயம் ரவியுடன்‘அப்பாடக்கரு’, விமலுடன் ’மாப்ளசிங்கம்’ படம், விஜய்சேதுபதியுடன் ’இறைவி’ படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயனை அஞ்சலி வளைத்து போட்டு விட்டதாக செய்திகள் வந்துள்ளது. இதற்கு அஞ்சலி சார்பில் அவரது மானேஜர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, ‘‘அஞ்சலி சென்னை வந்து பல நாட்கள் ஆகிவிட்டது. சிவகார்த்திகேயனை சமீபத்தில் அவர் சந்திக்கவே இல்லை. கடந்த வருடம் சிங்கப்பூரில் நடிகர்– நடிகைகள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் பங்கேற்றார்கள்.
சிவகார்த்திகேயனையும், அஞ்சலியையும் இணைத்து வெளியான செய்தியில் உண்மை இல்லை. தவறானவை’’ என்று கூறினார். சிவகார்த்திகேயனிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க தொடர்பு கொண்டபோது அவர் போனில் வரவில்லை.

No comments:

Post a Comment