Tuesday, 26 May 2015

சிம்பு-செல்வராகவன் படத்தின் தலைப்பு என்ன..?


நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநர் செல்வராகவன் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார் என்று ஏற்கனவே அறிவித்திருந்தோம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராக இருக்கும் இந்தப் படத்தில் சிம்பு ஹீரோவாகவும், கேத்ரின் தெரசா ஹீரோயினாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.
முதலில் இந்தப் படத்தில் சிம்புக்கு ஜோடியாக த்ரிஷா தான் நடிப்பதாக கூறப்பட்டது. இருவரையும் வைத்து ஃபோட்டோசெஷன் கூட நடத்தினார் செல்வராகவன். ஆனால் தீடிரென த்ரிஷா இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கு பல்வேறு காரணங்களும் கூறப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.12 நாட்கள் தான் முதலில் படப்பிடிப்பு நடத்துவதாக இருந்தது, ஆனால், 9 நாட்களில் படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். இதற்கு முக்கிய காரணம் படப்பிடிப்பிற்கு அனைவருமே சொன்ன நேரத்திற்கு வந்துவிடுகிறார்களாம்.
சிம்பு-செல்வராகவன் என்றாலே பிரச்சனை தான் படம் பாதியில் நின்று விடும் என்று கூறியவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை தான் கொடுத்துள்ளதாம். மேலும் இந்த படத்துக்கு "கான் " என்ற தலைப்பு வைத்து உள்ளாதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment