வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சூர்ய நடித்திருக்கும் ’மாஸ்’ படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து சந்தோஷத்தில் மிதக்கிறார் வெங்கட் பிரபு.
இந்நிலையில் அவர் அடுத்து தல அஜித்தை வைத்து படம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதை வெங்கட் பிரபுவே சொல்லியிருக்கிறாராம்.
சமீபத்தில் சினிமா இணைய தளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த வெங்கட்பிரபு நடிகர் அஜித்திற்காக சில ஸ்கிரிப்ட்கள் தயார் செய்து வைத்து உள்ளதாக கூறி உள்ளார். அஜித் கால்ஷீட் கொடுத்தால் போதுமாம்.. ஒருவேளை அஜித் நடிக்க ஒப்புக்கொண்டால் அஜித்தின் 57-வது படத்தை இயக்குபவர் வெங்கட் பிரபுவாக இருப்பார்.
இது குறித்து வெங்கட் பிரபு கூறும் போது, தல அஜித்துக்காக பல ஒன்லைன் ஸ்கிரிப்பட்கள் தயார் செய்து வைத்துள்ளேன். தல எஸ் என்று சொன்னால் எங்களது அணி தல57-வது படத்தை இயக்கும். ஆனால் விஷயங்கள் இறுதி செய்யப்படவில்லை. அது நடக்கும் போது உங்களுக்கு தெரியும் என்று கூறினார்.
ஏற்கனவே வெங்கட் பிரபு - அஜித் கூட்டணியில் வெளிவந்த மங்காத்தா படம் மாபெரும் பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment