முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சேவுக்கு இலங்கையின் மோசடி பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சேவை விசாரணைக்கு வருமாறு மோசடி பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சிறிலிய சவிய என்ற அமைப்பின் மூலம் நிதி மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே சிராந்தியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த அமைப்பின் தலைவராக சிராந்தி செயல்பட்டு வந்துள்ளார்.
சிராந்தி வரும் ஜூன் 1ஆம் தேதிக்குள் நிதி மோசடி தடுப்பு பிரிவில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிசேனா அரசு தங்கள் குடும்பத்தை சித்ரவதை செய்ய முயல்வதாக நமல் ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment