Wednesday, 27 May 2015

கமல், ரஜினி, விஜய், சூர்யா வரிசையில் சிவகார்த்திகேயன்..!


காக்கி சட்டை படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ’ரஜினி முருகன்’. பொன்ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சூரி, சமுத்திரகனி, ராஜ்கிரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
வரும் ஜூலை 17 ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். டி.இமானும்சிவகார்த்திகேயனும் இணைந்தால் அந்த படத்தின் பாடல்கள் எப்படியிருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை. ‘ஊதாக்கலரு ரிப்பன்’ங்கிற ஒரு அடையாளம் போதும் அதை சொல்வதற்கு.
இந்தப்படத்திற்கும் அப்படிதான் மனதை வாரி அள்ளிக் கொள்கிற மாதிரி பாடல்களை போட்டிருக்கிறாராம் டி.இமான். அதற்கு உதாரணமாக தான் இப்படத்திற்கான சிங்கிள் டிராக் மே 29ல் சிங்கப்பூரில் வெளியாகவிருக்கிறது. என்னமா இப்படி பண்றீங்களேமா என்ற இந்த பாடலை முதலில் மதுரையில் வெளியிடுவதாக திட்டமிட்டார்களாம்.
தற்பொழுது சிங்கப்பூர் சன் டெக் சிட்டியில் வரும் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்சியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும் நிகழ்வில் சிவகார்த்திகேயனும், டி. இமானும் இணைந்து இப்பாடலை பாடவிருக்கிறார்களாம். இதனால் இந்த நிகழ்ச்சியை காண இப்பவே முண்டியடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது சிங்கப்பூர்.
பொதுவாக கமல், ரஜினி, விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தான் வெளிநாட்டில் பாடல் வெளியீட்டு விழா வைப்பார்கள். ஆனால் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகரானசிவகார்த்திகேயன் அந்த வரிசையில் இடம் பிடித்துவிட்டார்.

No comments:

Post a Comment