ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 100 வயது பாட்டி ஒருவர் தனது அசத்தலான நடனத்தால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
உடலில் தெம்பும், மன உறுதியும் இருந்தால், 100 வயதிலும் ஆடலாம் என்பதை இந்த பாட்டி நிரூபித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எய்லீன் தான் மேற் சொன்ன 100 வயதாகும் குமரிப் பெண். தனது 24வயதில் முதன் முதலாக மேடையில் ஏறி நடன நிகழ்ச்சி நடத்திய எய்லீனுக்கு தற்போது 100 வயதாகும்.
தொடர்புடைய செய்திகள்: பிறந்த 10 நாளில் முட்டையிட்ட கோழி குஞ்சு!!! அங்கயுமா??
ஆனால், தற்போதும் மேடை நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார். மேலும், பலருக்கு நடனம் கற்றுக் கொடுத்தும் வருகிறார். எய்லீனின் நடனத்திற்கு ஆஸ்திரேலியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. பலரும் ஆர்வத்துடன் எய்லீனிடம் நடனப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இது குறித்து எய்லீன் கூறுகையில், ’வயதாகி விட்டதாக நான் ஒரு போதும் கருதவில்லை. திறமை, பயிற்சி மற்றும் தன்னம்பிக்கையால் நடனமாட முடிகிறது’ என்று கூறுகிறார்.
தொடர்புடைய செய்திகள்: ஒரு டீச்சர் செய்யும் வேலையா இது?? வெகுண்டெழுந்த பெற்றோர்கள்!!
No comments:
Post a Comment