Wednesday, 27 May 2015

’மாஸ்’ படத்தில் சூர்யா கதாபாத்திரம்!!? ஹாட் நியூஸ் சொன்ன வெங்கட்பிரபு!!


இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கியுள்ள ’மாசு(மாஸ்) என்கிற மாசிலாமணி’ படத்தில் இரண்டு சூர்யாவில் ஒரு சூர்யா ’ஈழத் தமிழன்’ என்று கூறி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு ரசிகர்களுடன் டுவிட்டரில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உரையாடி வருகிறார். நாளை(மே 29) அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாசு(மாஸ்) என்கிற மாசிலாமணி’ படம் வெளியாவதால், இன்று காலை முதலே ரசிகர்களிடம் அது பற்றி உரையாடி வருகிறார்.


தற்போது சிறிது நேரத்திற்கு முன்பாக அப்படத்தில் இருக்கும் ஒரு சஸ்பென்ஸை அவரே உடைத்துள்ளார். ‘மாஸ்’ படத்தில் சூர்யா டூயல் ரோலில் நடிக்கின்றார் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த இரண்டு பேரில் ஒரு சூர்யா ‘ஈழத்தமிழன்’ என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
அவர் செய்த டுவிட் இதுதான்!!

No comments:

Post a Comment