அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மூத்த மகளான மலியா ஒபாமாவை கென்யாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் 7ஆண்டுகளாக காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கென்யா நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் கிப்ரோனோ, பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மலியாவை (16) கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதற்கு ஒபாமாவின் குடும்பத்துக்கு 50 மாடுகளையும், 100 ஆடுகளையும் சீதனமாக வழங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்: எனக்கே செல்ஃபோன் அனுமதி இல்லையா!!? ஒபாமா!!
கடந்த 2008–ம் ஆண்டு மலியாவை நான் முதன் முதலில் பார்த்த போதே காதலில் விழுந்து விட்டேன். இது குறித்து ஒபாமாவுக்கு நான் கடிதம் எழுத உள்ளேன். அதில் ஒபாமா கென்யா வரும் போது மலியாவையும் அழைத்து வரும்படி வலியுறுத்துவேன். தூதரகம் எனது கடித்தை ஒபாமாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதற்கு அவர் ஒப்புக்கொண்டால் மலியாவிடம் பாரம்பரிய முறைப்படி எனது விருப்பத்தை தெரிவிப்பேன். மலியாவின் செல்வாக்கு மீது காதல் கொள்ளவில்லை, திருமணத்துக்கு பின் மலியாவுடன் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புவதாவும் அவர் தெரிவித்தார்.
மலியாவை 2008ஆன் ஆண்டு முதன் முதலில் பார்த்த போதே காதலில் விழுந்து விட்டேன் என்று அவர் கூறினார். ஆனால் அப்போது மலியாவிற்கு 9 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment