ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் முன் தாய்மார்கள் தன் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து நூதன போராட்டதில் ஈடுப்பட்டனர்.
மெக்டோனால்ட்ஸ் உணவகத்தில் வேலைபார்க்கும் பெண் ஒருவர், பசியால் இருந்த தன் குழந்தைக்கு பால் கொடுத்ததை அங்குள்ள பாதுகாப்பு ஊழியர் தடுத்ததை அடுத்து, கோபமுற்ற அந்நகர தாய்மார்கள், திடீரென அந்த உணவகத்தின் முன்பு அமர்ந்து தன் குழந்தைகளுக்கு பால்கொடுக்க ஆரம்பித்து விட்டனர். கடந்த புதன் அன்று அங்கு வேலைபார்க்கும் பெண் ஒருவர், தன் குழந்தையுடன் வேளைக்கு வந்துள்ளார்.
அன்றைய தினம் அங்கு வெப்பநிலை அதிகமாக இருந்ததால் வெப்பம் தாங்க முடியாமல் குழந்தை பசியால் அழுதிருக்கிறது. எனவே அதற்கு பால்கொடுக்க நினைத்த அந்த பெண், அங்குள் ஒரு ஊழியரிடம் கேட்டிருக்கிறார். அவர், அதெல்லாம் கூடாது, மீறினால் அபராதம் கட்ட வேண்டியதிருக்கும் என எச்சரித்துள்ளார். சரி பரவாயில்லை என்று அந்த பெண் குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
இதை கண்ட அங்குள்ள பாதுகாப்பு ஊழியர், அதெல்லாம் கொடுக்க கூடாது என்று மீண்டும் மீண்டும் தடுத்திருக்கிறார். இந்த தகவலை அந்த பெண் அவரது நண்பியிடம் சொல்ல, அவர் அதை பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த செய்தி நகரம் முழுவதும் பரவ, அங்குள்ள பெண்கள் கோபமுற்று மெக்டோனால்ட்ஸ் முன்பு அமர்ந்து குழந்தைக்கு பால் கொடுக்கும் போராட்டத்தை நடத்தி விட்டனர்.
இது குறித்து மெக்டோனால்ட்ஸ் நிறுவனம், இங்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு அனுமதி உண்டு, பாதுகாப்பு ஊழியரி்ன் இந்த தவறான நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment