தெரிந்து கொள்வோம்: கருவறையில் தீபம் ஏற்றுவதும் மந்திரம் சொல்லுவம் ஏன்??
கோவில்களில் கடவுளின் உருவம் உள்ள கர்ப்பக்கிரகம் (கருவறை) இருட்டாக இருக்கும். பழங் காலத்தில் மின் விளக்குகள் கிடையாது. புகை, எண்ணெய் முதலியன பட்டு மூர்த்தியின் உருவம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக பல கோவில்களில் வெளியே தான் விளக்குகள் வைக்கப்பட்டு இருக்கும்.
கற்பூரமோ நெய் விளக்கோ காட்டும்போது கடவுளின் உருவம் நன்கு தெரியும். அப்போது பட்டர் அல்லது அர்ச்சகர் அந்தக் கோவிலின் , மூர்த்தியின் பெருமையை மனப்பாடமாக ஒப்புவிப்பார்.
இது புத்தகத்தில் படித்துச் சொல்லும் விஷயம் அல்ல. அவர் கூறுவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செவி வழி மூலம் பெறப்பட்ட அரிய விஷயம். அவ்வாறு ஒருவர் சுவாமியின் மீது வெளிச்சம் போட்டுக் காட்டி, விவரிக்கும்போது நமது முழு கவனமும் அதன் மீது இருக்கும். இதனால் இறைவனை தரிசிப்பவரது கடவுள் மீது மனம் ஒரு நிலைப்படும்.
இந்த தீபமேற்றுவதற்கு ஒரு தத்துவ விளக்கமும் உண்டு. மனத்திலுள்ள இருட்டு, அதாவது அஞ்ஞானம், விலக இறை அருள் தேவை. ஆரத்தியில் காட்டும் தீபம் எப்படி கர்ப்பக்கிரக இருளைப் போக்குகிறதோ அதுபோல, நம் அகத்தில் உள்ள இருளும் வழிபாட்டில் மறைந்து விடும். கற்பூரத்துக்கும் நெய் தீபத்துக்கும் வேறுபாடு உண்டு.
கற்பூரம் என்பது கொதிநிலையை அடைந்த உடன் நேராகப் பதங்கமாகும் தன்மை கொண்டது. அதாவது எரிக்கும்போது திரவ நிலையை எட்டாமல் நேரடியாக ஆவி நிலையை எட்டும். இந்தக் கற்பூரம் போல வெள்ளை உள்ளம், தூய உள்ளம் உடையோர், இடைப்பட்ட நிலைகளைக் கடந்து நேராக இறைவனிடத்தில் ஐக்கியமாகலாம் என்பதையும் கற்பூர ஆரத்தி நினைவுபடுத்துகிறது. கற்பூரம் இறுதியில் ஒன்றுமின்றி கரைந்து போகிறது. அதே போல ஆன்மாவானது சரீரத்தை விட்டு நீங்கி மறைந்து இறைவனோடு ஒன்றுபடுகிறது.
தற்காலக் கோவில்களில் கற்பூரம் ஏற்றுவதை அனுமதிப்பதில்லை. இதற்குக் காரணம் தூய கற்பூரத்துடன் செயற்கையான மெழுகைச் சேர்க்கும்போது அது கரித் தூளை உமிழ்கிறது. இது புறச் சூழலைக் கெடுக்கிறது. இதற்குப் பதிலாக அதே ஒளியூட்டும் பணியை நெய் விளக்கு செய்கிறது.
ராசிகளுக்கான இன்றைய தின பலன்
மேஷம் - ஏமாற்றம்
ரிஷபம் - தொல்லை
மிதுனம் - லாபம்
கடகம் - நட்பு
சிம்மம் - சுகம்
கன்னி - செலவு
துலாம் - தடங்கல்
விர்ச்சிகம் - பொறுமை
தனுசு - பேராசை
மகரம் - உற்சாகம்
கும்பம் - உயர்வு
மீனம் - நேர்மை
No comments:
Post a Comment