தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். முதலில் இவருடைய மார்க்கெட் சரிந்தாலும், பிறகு தன்னுடைய நடிப்பாலும், அழகாலும் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
தற்போது தமிழில் மாரி, பாயும் புலி, மர்ம மனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் மாரி படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இதையடுத்து விஷாலுடன் பாயும் புலி படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இந்தப் படத்திற்காக ஸ்கூட்டர் ஓட்டும் படி நடித்தாராம் காஜல் அகர்வால். ஆனால் அவருக்கு ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாது. இருந்தாலும் இயக்குநர் சுசீந்திரன் சொல்லிக் கொடுத்தபடி மயிலாப்பூர் லஸ் கார்னரில் இருந்து நாகேஸ்வர ராவ் பூங்கா வரை தட்டு தடுமாறி எப்படியோ ஸ்கூட்டர் ஓட்டினார் காஜல்.
அவர் வண்டி ஓட்டிய அழகைப் பார்த்த ரசிகர்கள், ‘ஃப்ளையிங் கிஸ்’ கொடுத்து உற்சாகப்படுத்தினர். அருகிலுள்ள கேரவனில் ஓய்வெடுத்த விஷால், சூரி இருவரும் ரோட்டில் வண்டி ஓட்டிய காஜலின் திறமையைப் பாராட்டினர்.
No comments:
Post a Comment