Saturday, 30 May 2015

விஜய்யுடன் நடிக்க பல கோடிகளை கேட்டு தலையை சுற்ற விட்ட வடிவேலு..!


விஜய் தற்போது புலி படத்தில் பிஸியாக இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு பிறகு அவர் இயக்குநர் அட்லீ படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தாவும், எமி ஜாக்ஸனும் நடிக்கின்றனர்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் இந்தப் படத்தில் காமெடியனாக நடிக்க வடிவேலுவை அழைத்தார்களாம் படக்குழுவினர். ஆனால், அவர் கேட்ட சம்பளத்தை பார்த்து படக்குழுவினருக்கு தலையே சுற்றிவிட்டதாம்.
தனது மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது கேட்டதை விடவும் அதிகமாக கேட்டாராம் வடிவேலு. அதுவும் பல கோடியாம். அதனால் வடிவேலுவே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டவர்கள், விஜய்யுடன் காமெடியனாக நடிக்க வேறு சில நடிகர்களிடம் பேசி வருகின்றனர்.
ஏற்கனவே ரஜினி நடித்த லிங்கா படத்தில் நடிப்பதற்கும் வடிவேலு பெரிய சம்பளம் கேட்டதால்தான் அவருக்கு பதிலாக அந்த படத்தில் சந்தானத்தை நடிக்க வைத்தனர் என்று ஒரு செய்தி வௌியானது குறிப்பித்தக்கது.

No comments:

Post a Comment