நடிகர் விஜய் புலி படத்தை அடுத்து ராஜா ராணி இயக்குநர் அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்தது. விஜய்யின் 59-வது படமான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் நடிக்கின்றனர். இப்படத்தை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தயாரிக்க இருக்கிறார்.
இவர் விஜய்யுடன் இணைவது மூன்றாவது முறை. ஏற்கனவே விஜய் நடித்த சச்சின், துப்பாக்கி படங்களை இவர் தான் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். முதலில் இப்படம் காதல் கலந்த ரொமாண்டிக் படமாக உருவாக உள்ளது என்ற சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது வந்த தகவல் படி படத்தில் ஒரு முழுநீள போலீஸ் கதபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் கசிகிறது.போலீஸ் கதையை மையப்படுத்தி இருந்தாலும் காதல் மற்றும் ரொமாண்டிக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் அட்லீ.
விஜய் போலீஸாக நடிப்பது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே போக்கிரி, ஜில்லா ஆகிய படங்களில் விஜய் போலீஸாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment