பிரான்ஸில் குளிர்காலப்பகுதியில் வைரஸ் தாக்குதலினால் 18,300 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. H3N2 எனும் வைரஸினால் இவ் உயிர் பலி நேர்ந்துள்ளது.
இந்த வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் 65 வயதினை கடந்தவர்களாவர். கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரையிலான காலப்பகுதியில் 18300 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
Vaccin நோய்த்தடுப்பு மருந்தை பயன்படுத்தியிருந்தால் இந்த அவல நிலை ஏற்படுட்டதாக InVS எனும் சுகாதார கண்காணிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நோய்த் தாக்கம் காரணமாக பிரான்சிஸ் இடம்பெற்ற அதிகூடிய உயிரிழப்பதாக இது கருதப்படுவதாக டாக்டர் Francois Bourdillon தெரிவித்துள்ளார்.
கடந்த 2006 - 2007 காலப்பகுதியில் H3N2 வைரஸ் தாக்கம் காரணமாக 12,300 பேர் வரையில் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment