Tuesday, 26 May 2015

7 வருடங்களாக நாடு திரும்ப வழியில்லை: தூக்கில் தொங்கிய பஹ்ரைன் வாழ் இந்தியர்!!


பஹ்ரைனில் குடியேறி வாழ்ந்து வந்த இந்தியர் ஒருவர் 7 வருடங்களாக தன் வீட்டிற்கு கூட வர முடியாத அளவுக்கு கடனில் மூழ்கியதால் தற்கொலை செய்து கொண்டார். கேரளாவைச் சேர்ந்தவர் பிரமு சுதிர் (Pramu Sudheer).
இவர் பஹ்ரைனின், முஹாரக் (Muharraq) தொழிலாளர் விடுதியில் தங்கி, அங்குள்ள ஒரு மெகானிக் ஷெடில் பணி புரிந்து வருகிறார். அங்கு இவர், நிறைய கடன் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.
ஏழு வருடங்களாக பஹ்ரைனில் வசித்து வரும், பிரமு சுதிர் ஒரு முறை கூட தம் தாய்நாட்டிற்கு மனைவி மற்றும் பிள்ளைகளைக் காண வரவில்லை என்று அவரது உறவினர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, விடுதியில் இருந்த சீலிங் ஃபேனில் துக்குப் போட்டு இறந்ததார்.


அதே அறையில், அவர் கைப்பட எழுதிய குறிப்பு ஒன்றும் கிடைத்துள்ளது. தாங்க முடியாத கடன் தொல்லையால் இந்த முடிவை எடுக்க வேண்டியாகி விட்டதாக அவர் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அவரது தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தடையின்மைச் சான்றிதழ் அளித்த பின்னர், அவரது உடலை கேரளாவுக்கு கொண்டுவரும் முயற்சியில் பஹ்ரைனில் உள்ள அவரது உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். சுதிருக்கு திருமணமாகி, 12 வயது மற்றும் 7 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment