Saturday, 30 May 2015

கை மாற்றிய தாணு.. கழட்டிவிட்ட விக்ரம்.. சோகத்தில் கெளதம் மேனன்..!


‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு இயக்குநர் கௌதம்மேனன் சிம்பு நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் என்னும் மலையாள நடிகை நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்பி’ என்ற மலையாள படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை அடுத்து இயக்குநர் கெளதம் மேனன் விக்ரம்நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என்று சமீபத்தில் கூறப்பட்டது. மேலும் இப்படத்தை ஐயங்கரன் நிறுவனம் தயாரிக்கப் உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இதற்கிடையில் ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார் விக்ரம். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்படத்தை ஐயங்கரன் நிறுவனத்துக்கு மாற்றிவிட்டாராம் தாணு. இதனால் விக்ரம் நடிக்கும் கௌதம்மேனன் படத்தை கைவிட்டுள்ளதாம் ஐயங்கரன் நிறுவனம்.
மேலும் கௌதம்மேனன் கூறிய கதையில் விக்ரமுக்கு முழு ஈடுபாடு இல்லை எனவும் கூறப்படுகிறது. விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கிவரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment