பாலிவுட்டில் பிரபல ஒளிப்பதிவாளராக இருப்பவர் நட்டி என்கிற நட்ராஜ். தமிழில் ’மிளகா’, 'சதுரங்கவேட்டை', 'கதம் கதம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது விஜய் நடிக்கும் 'புலி' படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படம் முடியும் தருவாயில் இருப்பதால் ஒரு சில இயக்குநர்களிடன் மீண்டும் நடிக்க கதை கேட்டு வந்துள்ளார். அவர் கேட்ட கதையில் இயக்குநர் பாண்டிராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராமு செல்லப்பா சொன்ன கதை அவருக்குப் பிடித்துப்போனது.
எனவே புலி படம் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று சொல்லி இருக்கிறார் நட்டி. அதன்படி விரைவில் ராமு செல்லப்பா இயக்கும் படத்தில் இணையவிருக்கிறார் நட்ராஜ். இந்தப் படத்தை 'ஈராஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.
இந்த படத்தில் 'நட்டி' நட்ராஜுக்கு ஜோடியாக நடிக்க சமந்தா உட்பட முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடந்து வருகிறது.
No comments:
Post a Comment