Tuesday, 26 May 2015

இன்போசிஸில் 113 நிர்வாகிகளுக்கு சம்பளம் 1 கோடியா..!!


நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை ஏற்றுமதி நிறுவனம் இன்போசிஸ். இந்நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சம்பளம் இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தில் 2013-14 நிதி ஆண்டில் 18 நிர்வாகிகள் (executives) மட்டுமே 1 கோடி ரூபாய்க்கு மேல்ஊதியம் பெறும் பட்டியலில் இருந்தனர். ஆனால் 2014-15 நிதி ஆண்டில் 113 நிர்வாகிகள் 1 கோடி ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறும் பட்டியலில் உள்ளனர்.


இதே போல் கடந்த வருடம் 60 லட்சத்திற்கும் மேல் ஊதியம் பெறுபவர்கள் எண்ணிக்கை 72 . அதுவே இந்த வருடம் 202 ஆக உயர்ந்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையிலிருந்தே இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற விஷால் சிக்கா ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment