தொலைக்காட்சி நடிகருக்கு ஜோடியாக நடித்து ஒரே படத்தில் ஓகோ என்று வந்தவர் ரிப்பன் நடிகை. இவரது முதல் படமே மாபெரும் வெற்றி என்பதால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன.
தற்போது அவருடைய நடிப்பில் நான்கு படங்கள் வெளிவந்து விட்டன. இந்த நான்கு படங்களுமே அவருக்கு வெற்றியை தேடி தந்துள்ளன. அதைத்தவிர வாரிசு நடிகருடன் ஒரு படமும், இசையமைப்பாளருடன் ஒரு படமும் நடித்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில் ரிப்பன் நடிகை படப்பிடிப்பு தளத்தில் செய்யும் ஓவர் பந்தாவை தாங்க முடியவில்லையாம். தயாரிப்பாளரிடம் நான் எல்லாம் பெரிய நடிகையாக்கும், எனக்கு தனி கேரவன் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம். கேரவனோடு நிறுத்திக் கொள்வது இல்லை. நான் தங்கினால் சிட்டியில் இருக்கும் பெரிய ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவேன் என்றும் அடம்பிடிக்கிறாராம்.
அதுகூட பராவியில்லை. தனக்கு உதவிக்கு என 6, 7 பேரை வைத்துள்ளாராம். அவர்களுக்கும் சேர்த்து சம்பளம் கொடுக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கூறி தயாரிப்பாளர்களின் பாக்கெட்டில் ஓட்டை போடுகிறாராம். வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளர்களும் அவர் கையை காட்டும் நபர்களுக்கும் சம்பளம் தருகிறார்களாம்.
No comments:
Post a Comment