அஜித் தற்போது‘வீரம்’ சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பதை அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க அவருக்கு தங்கையாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் அஜித் டாக்சிடிரைவராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத ஆரம்பத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. இதில் அஜித், லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. அஜித்தின் தங்கையாக நடிக்கும் லட்சுமிமேனன் கல்லூரிக்குச் செல்ல, அவருடன் அஜித் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின.
இந்நிலையில் ‘தல 56’ படத்திற்கான முதல் ஷெட்யூல் தற்போது முடிவடைந்துவிட்டது. இரண்டாவது ஷெட்யூல் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இதுவரை அஜித்துடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாத படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன் இந்த 2வது ஷெட்யூலில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சுமி மேனனுக்கான காட்சிகள் ஜூன் 2வது வாரத்தில் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment