Wednesday, 27 May 2015

பகலில் ஷூட்டிங், இரவில் கொண்டாட்டம்.. சின்னத்திரையின் சீக்ரெட்


பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர் சித்தி நடிகை.
இவர் பெரிய திரையில் தன் கணவருடன் சேர்ந்து சில படங்களை தயாரித்து வருவதுடன், சின்னத்திரையிலும் ஒரு சில நாடகங்களை தயாரித்து, நடித்து வருகிறார். தற்போது இவருக்கு பெரிய திரையை விட சின்னத்திரையிலேயே மவுசு அதிகமாக இருக்கிறது.
சின்னத்திரையில் நடிக்கும் போது பெரிய திரையில் ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் அதை மறுத்து விடுகிறாராம். காரணம் சின்னத்திரையில் நடிப்பதால் குடும்பப்பெண்களிடம் இவருக்கென்று ஒரு கிரேஸ் இருக்கிறதாம். இதனால் பெரிய திரையை விட சின்னத்திரையிலேயே அதிக கவனம் செலுத்துகிறாராம் சித்தி நடிகை.
அவர் தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இரட்டை வேடத்தில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த சில நாட்களாக சென்னையில் கோடை வெயில் கொளுத்துவதால் அவரால் இந்த சீரியலில் நடிக்க முடியவில்லை.
இதனால் என்ன செய்யலாம் என்று யோசித்த சித்தி நடிகை சீரியலின் கதையை கொடைக்கானலுக்கு திருப்பிவிட்டு மொத்த டீமையும் அங்கே அழைத்து சென்று விட்டராம். அங்கு சென்ற அவர்கள் பகலில் ஷூட்டிங், இரவில் கொண்டாட்டம் என செம ரவுண்டு கட்டுறாங்களாம்.

No comments:

Post a Comment