’அலைபாயுதே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அனைத்து தமிழ் பெண்களின் மனதையும் கொள்ளை அடித்தவர் நடிகர் மாதவன்.
தமிழில் மட்டும் நடித்துகொண்டு இருந்த மாதவனுக்கு திடீரென்று பாலிவுட் பக்கம் காத்து வீச ஆரம்பித்தது. அதனால் இந்தியிலும் பல படங்களில் நடிக்க தொடங்கினார். இந்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழ் படத்தில் கவனம் செலுத்தாமல் அங்கயே கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவருடைய நடிப்பில் கடந்த வெள்ளிகிழமை அன்று வெளிவந்த ’தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் மூன்றே நாட்களில் சுமார் 38.10 கோடியை வசூல் செய்து சாதனை புரிந்திருக்கிறது.மாதவன், கங்கனா ரணாவத் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப் படத்தில் குத்துப் பாடல்களோ, பன்ச் டயலாக்குகளோ எதுவும் கிடையாது.
கமர்சியல் ரீதியான எந்த விசயங்களும் இல்லாமல் குடும்ப செண்டிமெண்டை சொல்லும் இந்தப் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது படத்தின் வசூல் மூலம் தெரிகிறது.
முதல் நாளில் 8.85 கோடியும், இரண்டாம் நாளில் 13.20 கோடியும், மூன்றாவது நாளில் 16.10 கோடி ஆக மொத்தம் 38.10 கோடியை வசூலித்திருக்கிறது இந்தப் படம். இதே மாதிரி வசூல் தொடர்ந்தால் இந்த வருடத்தின் முதல் 100 கோடியை வசூலித்த படம் என்ற பெருமையை இப்படம் தட்டி செல்லும்.
No comments:
Post a Comment