சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு உண்டு. ஆனால் இவற்றின் அஸ்திவாரம் காமிக்ஸ் புத்தகங்கள் தான். காமிக்ஸ் புத்தகங்கள் மூலம் உருவாக்கப்பட்ட இந்த சூப்பர் ஹீரோக்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கம்.
அந்த வகையில் லண்டனில் ஆண்டுதோறும் காமிக் கதாப்பாத்திரங்களை பெருமைப்படுத்தும் வகையில் ’காமிக் கான் திருவிழா’ நடைபெறும். அதேபோல இந்த வருடமும், நேற்று லண்டனில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்: உங்களின் வரதட்சணை மதிப்பு எவ்வளவு என்று தெரிந்து கொள்ள ஆசையா??
இதில் உலகமெங்கிலும் இருந்து பல காமிக்ஸ் வெறியர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தங்களுக்கு பிடித்தமான சூப்பர் ஹீரோக்கள் போன்று வேடமணிந்து வந்திருந்தனர்.
வில்லன்கள் கதாபாத்திரத்தையும் பலர் தேர்ந்தெடுத்திருந்தாலும், அதில் பெரும்பாலானவர்களின் தேர்வாக இருந்தது, பேட்மேன் படத்தின் வில்லனான ‘ஜோக்கர்’ கதாபாத்திரம் தான்.
தொடர்புடைய செய்திகள்: டி.வி சீரியலாக மிரட்ட வரும் X-Men!!
மேலும் இந்த விழாவில் உலகப் புகழ் பெற்ற சூப்பர் ஹீரோக்களான, பேட்மேன், அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், எக்ஸ் மேன், சூப்பர் மேன் உள்ளிட்ட பல சூப்பர் ஹீரோக்களைப் போன்று வேடமிட்டு கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment