ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளிவந்த படம் 'பிகே' .
இப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும், நல்ல வரவேற்பை பெற்றதால் உலகம் முழுவதும் சுமார் ரூ 600 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக இந்தி திரையுலகில் கூறப்படுகிறது. அதோடு இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் பிகே படம்படைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது பிகே படம். இந்தியா தவிர்த்து பாலிவுட் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருப்பது என்னவோ சீனாவில் தான். கடந்தவாரம் சீன மொழியில் வெளியான பிகே படம் இந்தியாவைக் காட்டிலும், சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.34 கோடியை வசூல் செய்துள்ளது பிகே படம். இந்திய படம் ஒன்று சீனாவில் இவ்வளவு பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி இருப்பது இதுவே முதன்முறை.
No comments:
Post a Comment