Monday, 25 May 2015

லிப் கிஸ் அடிக்கும் கமல்-த்ரிஷா.. வெளியே கசிய விட்ட படக்குழுவினர்


’உத்தமவில்லன்’ படத்தை தொடர்ந்து கமல் நடிக்கவுள்ள படம் ’தூங்கா வனம்’. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படத்தை எடுக்கவிருக்கிறார் கமலின் உதவியாளர் ராஜேஷ்.
தற்போது இப்படத்தின் படப் பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இப்படத்துக்காக சமீபத்தில் போட்டோ ஷூட் நடந்தது. படத்தில் இடம்பெறும் காட்சிகளை இயக்குநர் ராஜேஷ் படமாக்கினார். அப்போது நடிகை த்ரிஷாவுக்கு கமல்ஹாசன் லிப் டு லிப் கிஸ் தரும் காட்சியும் படமானது. அந்த புகைப்படங்கள் இப்போது இண்டர்நெட்டில் உலா வருகிறது.
இந்த காட்சியில் த்ரிஷாவின் முகம் தெரியவில்லை. ஆனால் படத்தில் இந்த காட்சி இடம் பெறும்போது த்ரிஷாவின் முகம் தெரியும்படி படமாக்கப்படும் என பட குழுவினர் தெரிவித்தனர். கமல்ஹாசன் படத்தில் லிப் டு லிப் முத்தக்காட்சி எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
ஆனால் சமீபகாலங்களாக அவர் இதுபோன்ற முத்தக் காட்சியில் நடிக்காமல் இருந்தார். ஆனால் இப்போது மீண்டும் முழு வீச்சில் முத்தக் காட்சியில் நடிக்க அவர் தயாராகிவிட்டார். ‘போட்டோ ஷூட்டில் திரிஷாவுக்கு முத்தமிடுவதுபோல் போஸ் கொடுத்தாலும் அது 100 சதவீத முத்தக்காட்சியாக எடுக்கப்படவில்லை.
ஆனால் படத்தில் அந்த காட்சி, கதைக்கு அவசியம். அதனால் ஷூட்டிங் நடக்கும்போது அதில் கமல்-த்ரிஷா இருவருமே 100 சதவீத ஈடுபாட்டுடன் நடிப்பார்கள்’ என தூங்கா வனம் படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment