Tuesday, 26 May 2015

ஊக்க மருந்து பயன்படுத்திய பாகிஸ்தான் வீரருக்கு 2 வருடம் தடை!!?


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஸா ஹசனுக்கு ஊக்க மருந்து பயன்படுத்திய வழக்கில் 2ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரஸா ஹசன் கடந்த ஜனவரி மாதம், நடைபெற்ற உள்ளூர் போட்டியின் போது ஊக்க மருந்து பயன்படுத்தியதாக கருதி ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.


சமீபத்தில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து இது குறித்து விளக்கமளிக்குமாறு ஹசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால், குறித்த காலத்திற்குள் ஹசன் விளக்கமளிக்க தவறியதால், அவருக்கு 2 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிப்பதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment