Wednesday, 27 May 2015

போர்ப்ஸின் அதிகாரம் மிக்க 100 பெண்கள் பட்டியலில் 4 இந்தியர்கள்!!?


அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் அதிகாரமிக்க 100 பெண்கள், பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்க்கல் முதல் இடத்தையும், அமெரிக்கா அதிபர் தேர்தலில் குதித்துள்ள ஹிலாரி கிளிண்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மூன்றாவது இடத்தில் மைக்ரோசாஃப்ட் அதிபர் பில்கேட்சின் மனைவி மலிந்தா கேட்ஸ் உள்ளார்.


இந்தியாவைச் சேர்ந்த நான்கு பெண்களும், இந்த 100 பேர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா 30வது இடத்தில் உள்ளார் கடந்த வருட பட்டியைலைவிட 6 இடங்கள் அவர் முன்னேறியுள்ளார். ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்கார், கடந்த ஆண்டைவிட 8 இடங்கள் முன்னேறி 35வது இடத்தில் உள்ளார்.
முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் முசும்தார் 85வது இடத்திலும், பட்டியலில் புதிதாக இடம் பிடித்துள்ள இந்துஸ்தான் டைம்ஸ் ஊடக நிறுவன தலைவர் ஷோபனா பார்தியா 93வது இடத்திலும் உள்ளனர்.


No comments:

Post a Comment