Wednesday, 27 May 2015

இயக்குநருடன் மோதல்: படத்தில் இருந்து வெளியேறினார் ஷாம்..!


புறம்போக்கு படத்திற்கு பிறகு நடிகர் ஷாமின் மார்கெட் சற்று உயர்ந்து இருக்கிறது என்று சொல்லலாம்.
அதுவும் போலீஸ் வேடம் அவருக்கு பொருத்தமாக இருக்கிறது. ஒரு சில படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு வருகிறது. அந்த வகையில் தற்போது வித்தியாசமான வேடம் ஒன்றில் நாகராஜன் இயக்கும் ‘காலக்கூத்து’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ஷாம்.
இதில் இன்னொரு ஹீரோவாக ‘மெட்ராஸ்’ கலையரசனும் நடிக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் தொடங்கியது. அப்போது ‘ஷாட்’ வைப்பது தொடர்பாகவும், ஷாமின் ‘லுக்’கில் மாற்றம் செய்ததிலும் இயக்குநருக்கும், ஷாமுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து அந்தப் படத்தில் இருந்து ஷாம் வெளியேறினார். இதுபற்றி ஷாம் தரப்பில் கேட்டபோது, ‘கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மைதான். பிரச்னை எதுவும் வேண்டாம் என்று இயக்குநரிடம் கூறிவிட்டு, ஷாம் வெளியேறி விட்டார்’ என்றனர். இப்போது கலையரசன் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். ஷாம் கேரக்டருக்கு வேறு ஹீரோ தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment