ஓகே காதல் கண்மனி படத்தை அடுத்து இயக்குநர் மணிரத்னம் ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என்றும், இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய், நாகார்ஜூன், மகேஷ் பாபு, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வந்துள்ளது. தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் தயாராகிறதாம்.
இந்த புதிய படத்தை பற்றிய அறிவிப்பு நீண்ட நாளுக்கு முன்பே வெளிவந்தது. ஆனால் இயக்குநர் மணிரத்னம் கடைசியாக இயக்கிய சில படங்கள் தோல்வி அடைந்ததால் அவருடைய இயக்கத்தில் நடிக்க ஐஸ்வர்யாஓகே சொன்னாலும், ஹீரோக்கள் நழுவிச் சென்றனர். அதனால் அத்திட்டத்தை அப்போதே கைவிட்டு ஓகே காதல் கண்மனி படத்தில் பிஸியானார்.
ஆனால் தற்போது ஓகே காதல் கண்மனி படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றதால் மீண்டும் அத்திட்டத்தை தூசி தட்டி இருக்கிறார் மணிரத்னம். சமீபத்தில் ஐஸ்வர்யாராயிடம் அவர் பேசினார். ‘புதிய படத்தில் எப்போது அழைத்தாலும் வந்து நடிக்க தயார்’ என அவர் ஓகே சொன்னார்.
இதையடுத்து புதுபடத்துக்கான ஆரம்பகட்ட பணிகளில் மணிரத்னம் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார். இந்த தமிழ்-தெலுங்கு படத்தில் நாகார்ஜுனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயும், மகேஷ் பாபுவுக்குஸ்ருதி ஹாசன் ஜோடியாகயும் நடிக்க இருப்பதாக தெரிகிறது.
No comments:
Post a Comment