கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதை ஊர் உலகமே அறியும். இந்த வருடம் இறுதியில் இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் பல்வேறு விஷயங்களில் ஒத்துப் போகவில்லை என்றும், கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும், இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் நடிகை த்ரிஷா தொடர்ந்து நடிக்க விரும்பியதாகவும்வருண்மணியன் தரப்பில் நடிக்க தடை விதித்ததாகவும் எனவேதான் திருமணம் ரத்தானது என்றும் கூறப்பட்டது.
ஆனால் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் இதை மறுத்ததுடன், த்ரிஷா திருமணத்துக்கு பிறகு நடிக்க விரும்பியதே வருண்மணியன் தான் என்றும் திருமணம் நின்றுப்போனதுக்கு குடும்பத்தில் உள்ள சில பெரியவர்களால் தான் காரணம் என்றும் கூறினார். ஆனால் நடிகை த்ரிஷா இதுவரை இந்த விவகாரம் குறித்து பதில் சொல்லாமல் இருந்தார்.
தற்போது முதல் தடவையாக திருமணம் நின்றது பற்றி கருத்து தெரிவித்து உள்ளார். திருமணம் நின்றுப்போனது குறித்து த்ரிஷா கூறியதாவது:–
எனது திருமணம் ரத்தானது உண்மைதான். இது எதிர்பாராமல் நடந்த ஒன்று. சில விஷயங்கள் நம்மையும் மீறி நடந்து விடுகின்றன. அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். திருமணம் நின்றது பற்றி நான் கவலைப்படவில்லை. அது பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கவும் விரும்பவில்லை. வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும். தற்போது எனது முழு சிந்தனையும் சினிமாவில்தான் இருக்கிறது.
வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களும் கடவுள் விருப்பப்படியே நடக்கின்றன. எனக்கு நல்லா விஷயங்களை பற்றியும் வெளிப்படையாக பேசக்கூடிய குணம் உண்டு. என் வாழ்க்கையில் எது நிகழ்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறினார் த்ரிஷா.
No comments:
Post a Comment