Saturday, 30 May 2015

சன்னி லியோனால் தான் இப்படி ஆனேன்.. கொலவெறியில் ராக்கி சாவந்த்


பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மற்றும் சன்னி லியோனை பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்காது. கவர்ச்சியில் பொளந்து கட்டுவார்கள். படமே நடிக்க வில்லை என்றாலும் சமூக தளங்களில் அரை நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார்கள்.
இதில் சன்னி லியோனை பற்றி சொல்லத்தேவையில்லை. நடிகை ராக்கி சாவந்த் சரத்குமாரின் கம்பீரம், முத்திரை போன்ற படங்களில் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக டான்ஸ் ஆடி ரசிகர்களை கிறங்கடித்தவர். ஆரம்பத்தில் இருந்தே இவருக்கும், சன்னி லியோனுக்கும் ஏகாப்பொருத்தமாக இருக்கிறது. அதுவும் சன்னி லியோனை பாலிவுட்டில் இருந்து விரட்ட நினைக்கிறார் ராக்கி சாவந்த்.
கவர்ச்சியை காட்டி காலத்தை ஓட்டிய ராக்கிக்கு ஆபாச படங்களில் நடித்து வந்த ’சன்னி லியோன்’ பாலிவுட் வந்தது சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் நேரம் கிடைக்கும் போது எல்லாம் சன்னியை விளாசித் தள்ளுகிறார்.
நல்ல குடும்பப்பாங்கான கேரக்டர்களிலேயே நடிக்க விரும்பும் நான், கவர்ச்சி நடிகை சன்னி லியோனால் தான் குறைந்த அளவு ஆடைகளை அணிந்து கவர்ச்சி நடிகை ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார் நடிகை ராக்கி சாவந்த்.
இதுகுறித்து, ராக்கி சாவந்த் கூறியதாவது, சன்னி லியோனால் தான் இந்திய திரையுலகம் சீரழிந்து கிடக்கிறது. இளைய தலைமுறையை, அவர் தவறான பாதைக்கு இட்டுச்செல்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ’சன்னி லியோன்’, விரைவில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும், இல்லையெனில், அவர் திரையுலகத்தை விட்டாவது விரைவில் வெளியேற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொள்ள இருப்பதாக ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment