இந்தியாவில் ஏப்ரல்-மே, சுட்டெரிக்கும் கோடைக் காலம் வருவது வழக்கம். இந்த காலங்களில் வெப்பத்தின் அளவு 50 டிரிகிரி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு கோடையின் கோர தாண்டவம் கடந்த வாரம் முதல் தொடங்கியது.
இந்தியா முழுவதும், கடந்த வாரம் முதல் வெயில் கொளுத்தி வருகிறது. தமிழ்நாடு தமிழ்நாட்டில், கடந்த வாரம் வரை மழை பெய்து வந்தது. இதனால், வெயிலின் தாக்கம் அந்த அளவுக்கு உணரப்பட வில்லை என்றாலும், நேற்று தலைநகர் சென்னையில் வெப்பத்தின் அளவு 37 டிகிரி சென்ஷியஸாக இருந்தது.
வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு அதிகர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அப்படியே இதையும் படிங்க: கோடையில் தர்பூசணி சாப்பிடுவது கெட்டதாம்… தெரியுமா??
500 பேர் பலி
இந்நிலையில், வெப்பத்தின் தாக்கத்திற்கு இந்தியா முழுவதில் இருந்தும், 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த புதன் கிழமை முதல், 400 பேர் பலியாகி யுள்ளனர்.
நேற்றைய நிலவரம்…
நேற்றைய நிலவரப்படி, தெலுங்கானாவின் கம்மான் பகுதியில் அதிகபட்சமாக 48 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 47°C வெப்பம் பதிவாகியுள்ளது.
நேற்று அதிகபடியான வெப்பம் பதிவான இடங்களின் பட்டியல் பின்வருமாறு:
தெலுங்கானா - 48°C
அலகாபாத் - 47.7°C
ஆந்திர பிரதேசம் - 47°C
ஒடிஸா - 46.7°C
அப்படியே இதையும் படிங்க: 3 நாட்களில் 200 பேரை காவு வாங்கிய கோடை வெயில்!!
டெல்லியில் 186 பேர் பலி...
இவற்றோடு ஒப்பிடுகையில், தலைநகர் டெல்லி சற்று குளிர்ந்தே (43.5°C) காணப்பட்டது எனலாம். இருந்தாலும், டெல்லியைச் சேர்ந்த பொதுநல நிறுவனமான தி செண்டர் ஆஃப் ஹாலிஸ்டிக் டெவெலப்மெண்ட், கடந்த சனிக்கிழமை வரை வெப்பத்தின் தக்கத்தினால் 186 பேர் பலியானதாக தெரிவித்துள்ளது.
பலியானவர்களில் 80%த்தினர் வீடற்றவர்கள் என்றும் இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து டெல்லி அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னமும் வரவில்லை. இது தவிற ஒடிஸாவில் 24 பேர் கோடை வெயிலுக்கு பலியாகியுள்ளனர்.
பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரணம்
ஆந்திரா-தெலுங்கானா இரு மாநிலங்களிலிருந்தும், வெப்பத்தின் தாக்கத்திற்கு, 400 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வெப்பத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லடசம் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயிடு அறிவித்துள்ளார்.
அப்படியே இதையும் படிங்க: கோடை காலத்திற்காக உடலை ஷேப் ஆக்கும் பிரிட்டன் வாசிகள்…
No comments:
Post a Comment