Tuesday, 26 May 2015

சில்வஸ்டர் ஸ்டாலோன் படத்தில் சல்மான் கான்..?


ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோனுடன், பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க இருப்பதாக பாலிவுட் திரையுலகில் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் தீயாக பரவி வருகிறது.
ஹாலிவுட்டின் முன்னணி நடிகரான சில்வஸ்டர் ஸ்டாலோனுடன் சேர்ந்து ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்று பல நடிகர்கள் ஏங்குகிறார்கள். ஹாங்காங் நடிகர் ஜாக்கி சான் கூட சில்வஸ்டர் ஸ்டாலோனுடன் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை என்று அவரே தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் தான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் சில்வஸ்டர் ஸ்டாலோன் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதை சில்வஸ்டர் ஸ்டாலோனே கூறியுள்ளதாகவும் சொல்கிறார்கள். சில்வஸ்டர் ஸ்டலோனும், சல்மான் கானும் சமீபத்தில் டுவிட்டரில் பேசியிருக்கிறார்கள்.
நடிகர் சல்மான் கான், சில்வஸ்டர் ஸ்டலோனின் ராக்கி, ராம்போ உள்ளிட்ட படங்களை தான் பார்த்துள்ளதாகவும், அதை உந்துதலாகக் கொண்டே இன்றுவரை தினமும் உடற்பயிற்சி செய்வதாகவும் டுவிட்டரில் ஸ்டாலோனை குறிப்பிட்டு பதிவிட்டார்.
அதற்கு சில்வஸ்டர் ஸ்டலோன் "சல்மான். உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது. உனது ரசிகர் கூட்டம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. ஒரு வெற்றிகரமான ஆக்‌ஷன் படம் எடுக்க, அருமையான ரசிகர் கூட்டம் தேவை. விரைவில் நாம் ஒரு ஆக்‌ஷன் படத்தில் இணைவோம். ஒரு வேளை அடுத்த எக்ஸ்பேன்டபிள்ஸ் படத்தில்?" என பதிவேற்றியுள்ளார்.
இதனால் அடுத்த எக்ஸ்பேன்டபிள்ஸ் படத்தில் சல்மான் நடிப்பாரா என்ற ஆவல் இப்போதே பாலிவுட்டில் தொற்றிக்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment