Thursday, 28 May 2015

விழிபிதுங்கி நின்ற த்ரிஷா.. நைசாக கிளப்பிய வில்லன்..!


’உத்தமவில்லன்’ படத்தை தொடர்ந்து கமல் நடிக்கவுள்ள படம் ’தூங்கா வனம்’. கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கும் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜும் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது.
சில நாட்களுக்கு முன்பு பர்ஸ்ட் லுக் புகைப்படங்களும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் தூங்காவனம் தெலுங்கில் சீகட்டி ராஜ்ஜியம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் கமல்ஹாசன், த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களாக மீடியாவை பார்க்க பயந்து வரும் த்ரிஷா இந்த சந்திப்பில் தயக்கத்துடனே கலந்துக்கொண்டார். காரணம் த்ரிஷாவுக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அவரது திருமணம் திடீர் என்று நின்றுவிட்டது. திருமணம் நின்ற பிறகு த்ரிஷா தற்போது பட வேலைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.
இதனால் திருமணம் நிச்சயதார்த்தத்தோடு நின்றுவிட்டதால் மீடியாவை பார்க்க பயப்படுகிறாம் த்ரிஷா. பத்திரிக்கையாளர்களை சந்தித்தால் திருமண நிச்சயதார்த்தம் நின்று விட்டது குறித்து கேள்வி கேட்பார்களே என்றும் அதற்கு என்ன பதில் கூறுவது என்று தயங்கிவருகிறார். இந்த நிலையில் தான் சீகட்டி ராஜ்ஜியம் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டார் த்ரிஷா.
கடைசியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்ததும் த்ரிஷா அந்த இடத்தில் இருந்து நைசாக கிளம்ப நினைத்தார். திருமணம் நிச்சயதார்த்தம் நின்றது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்பார்களே என்று விழிபிதுங்கி நின்றிருந்தார். அந்த நேரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் த்ரிஷாவை அங்கிருந்து நைசாக கிளம்ப உதவி செய்தார். உடனே  த்ரிஷா காரில் ஏறி பறந்து சென்றுவிட்டார்.

No comments:

Post a Comment