Thursday, 28 May 2015

நாய்க்கு 7 லட்ச ரூபாய் தங்க ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்!!?


சீன கோடீஸ்வரர் தனது செல்ல நாய்க்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்சை கட்டி விட்டுள்ளார். அதுவும் ஒன்னுக்கு இரண்டாக கட்டிவிட்டுள்ளார்.
சீனாவைச் சேர்ந்தவர் வான்சிகாங். இவரது தந்தை சீனாவில் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர். மேலும், பெரும் பணக்காரர்களில் ஒருவர். வான்சிகாங் தனது செல்ல பிராணியாக ஒரு உயர் ரக நாய்யை வளர்த்து வருகிறார்.


இதன் முன்னங்கால்கள் இரண்டிலும், தங்கத்தால் ஆன பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்சுகளை கட்டிவிட்டுள்ளார். இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம்.
தனது செல்ல நாய்க்கு விலை உயர்ந்த கடிகாரம் அணிவித்திருப்பது பற்றி வான்சிகாங் கூறும்போது, ’இது எனது செல்ல நாய் இதற்காக எவ்வளவு செலவு செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். தற்போது 2 கடிகாரம் மட்டுமே வாங்கியதால் அதை 2 கால்களில் அணிவித்திருக்கிறேன். விரைவில் மேலும் 2 கடிகாரம் வாங்கி மற்ற 2 கால்களிலும் அணிவிக்கப்போகிறேன்’ என்று கூறினார்.

No comments:

Post a Comment