Tuesday, 26 May 2015

இன்றைய தினம்!!!(மே 26)


மே 26
விண்வெளி சென்ற முதல் அமெரிக்க பெண் சாலி ரைட் பிறந்தார்!!
விண்வெளியில் கால்பதித்த முதல் அமெரிக்க பெண்ணான சாலி ரைட்டின் (Sally Ride), 64 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸில் 1951 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் பிறந்த ரைட், தனது 32 ஆவது வயதில் விண்வெளியில் கால் பதித்தார்.
விண்வெளி வீராங்கனை மற்றும் இயற்பியலாளரான சாலி ரைட், 1983 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் விண்வெளியில் கால்பதித்த முதல் அமெரிக்க பெண் என்னும் வரலாறு படைத்தார். இளைஞர்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
கலிஃபோர்னியா ஸ்பேஸ் இன்ஸ்டிட்யூட்டில் பேராசிரியராக பணியாற்றினார். இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பாடம் குறித்த விழிப்புணர்வும் ஊக்குவிப்பும் அளித்து வந்தார். கலிஃபோர்னியாவில் 2012 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
சாலியை பெருமைப்படுத்தும் வகையில் அவரது 64 ஆவது பிறந்த நாளான இன்று, கூகுள் டூடுல் பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது கூகுள் நிறுவனம்.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1896 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் சார் மன்னனாக முடி சூடினான்.
1918 - ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.
1969 - அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது.
2002 - மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.
சிறப்பு நாள்:
போலந்து அன்னையர் தினம்.
ஜோர்ஜியா தேசிய தினம்.

No comments:

Post a Comment