Monday, 25 May 2015

சினிமாவிற்கு வந்ததும் எனக்கு எல்லாமே போச்சு-சமந்தா..!


தமிழிலும், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருப்பவர் நடிகை சமந்தா. தமிழில் விக்ரம் ஜோடியாக ’பத்து எண்றதுக்குள்ள’, சூர்யாவுக்கு ஜோடியாக 24, தனுஷுக்கு ஜோடியாக ஒரு படம், அட்லீ இயக்கும் படம் என்று அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தான் பயந்த சுபாவம் உடையவள் என்றும், சினிமாவுக்கு வந்த பின்னர் அந்த பயம் போய்விட்டதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:– என் சினிமா வாழ்க்கை நல்லபடியாக போகிறது. இடையில் சிறிது ஓய்வு எடுத்தாலும் பட வாய்ப்புகள் குறையவில்லை. கதாநாயகர்களால் தான் நான் நடனம் ஆட கற்றுக்கொண்டேன். சிறுவயதில் எனக்கு கூச்ச சுபாவம் இருந்தது. நான்கு பேர் சேர்ந்து இருந்தால் அந்த இடத்துக்கு போக பயப்படுவேன்.
பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடும் படி ஆசிரியை வற்புறுத்தினார். நிறைய ஆட்கள் பார்ப்பார்களே என்ற கூச்சத்தால் மறுத்து விட்டேன். அந்த கூச்சமும் பயமும் சினிமாவுக்கு வந்ததும் போய் விட்டது. படப்பிடிப்பு அரங்கில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இப்போது நடனம் ஆடுகிறேன்.
முதலில் எனக்கு ஆட வரவில்லை. ஆனால் இப்போது நான் நன்றாக நடனம் ஆடுகிறேன். அதற்கு காரணம் ஹீரோக்கள் தான். அவர்களை பார்த்து தான் நான் நடனம் கற்று கொண்டேன் என்று கூறியுள்ளார் சமந்தா.

No comments:

Post a Comment