சூர்யா நடிப்பில் வரும் மே 29 ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் படம் ’மாஸ்’. அஞ்சான் படத்தில் விட்டதை இந்த படத்தில் பிடித்துவிட வேண்டும் என்று குறிக்கோளோடு இருக்கிறார் சூர்யா.
அதற்கு தகுந்தாற் போல் படத்தை பார்த்த திரையுலகத்தை சேர்ந்த ஒரு சிலர் மாஸ் படம் மாஸாக வந்திருப்பதாகவும் படம் நிச்சயம் ஹிட்டாகும் என்றும் தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்கள். இதனால் வெங்கட் பிரபு மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா அண்மையில் அளித்த பேட்டியின் போது தனது நண்பன் விஜய் தன் மீது வைத்துள்ள பாசம் பற்றி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு விஜய் தனது பிறந்தநாள் அன்று நண்பர்களுக்கு பார்ட்டி அளித்துள்ளார். விஜய் என்னை தொடர்பு கொண்டு தனது வீ்ட்டில் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார்.
நான் மும்பையில் இருக்கிறேன், சென்னை வர இரவு 11 மணி ஆகிவிடுமே என்றேன். அதற்கு விஜய், நள்ளிரவு வரை பார்ட்டி நடக்கும், நீ வா பார்த்துக்கொள்ளலாம் என்றார். சென்னைக்கு வந்த நான் நேராக விஜய்யின் வீட்டிற்கு சென்றேன். அங்கு பார்த்தால் விஜய் மற்றும் அனைவரும் எனக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
அதை பார்த்து எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என நெகிழ்ந்துள்ளார் சூர்யா. சூர்யாவும், விஜய்யும் சென்னை லயோலா கல்லூரியில் படித்த காலத்தில் இருந்து நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் நேருக்கு நேர், பிரண்ட்ஸ் படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment