பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை திடீரென அவரது டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சந்திதார்.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், மன்மோகன் சிங் அவரை சந்தித்துப் பேசியதாக மன்மோகன் சிங் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் வெளியுறவு கொள்கைகள் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடபுடைய செய்திகள்: மோடி ஆட்சிக்கு வந்து 1 ஆண்டு ஓவர்: மார்க் போட்ட ஊடகங்கள்!!
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளார்.
நேற்று காலையில் ஒரு கூட்டத்தில் பேசிய மன்மோகன் சிங் மோடி அரசு பல முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், ஊழல் என்று கூறிவருவதாக கூறினார்.
மேலும், மோடியின் ஓராண்டு கால ஆட்சியை கடுமையாக விமர்சித்து இருந்தார். ஆனால், நேற்று மாலையே இருவரும் சந்தித்து பேசிய இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்: மோடிக்கு வாட்ஸாப் மூலம் வந்த கொலை மிரட்டல்!! ஃபுல் அலர்ட் ஆகும் போலீஸ்!!
No comments:
Post a Comment