சிவகாசியை அடுத்த சாத்தூர், சிவலிங்கபட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலை ஒன்றில் நேற்று காலை திடீரென பட்டாசுகள் வெடித்ததால், விபத்து ஏற்பட்டது. பெரும் திரளான தீயால், அவ்விடமே கரும் புகையால் சூழ்ந்ததுடன், ஆலையின் சில இடங்களில் இடிபாடுகலும் ஏற்பட்டன.
இதுகுறித்த தகவலறிந்து அந்த தீயணைப்புப் படையினரும், 108 ஆம்புலன்சுகளும் இவ்விடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இவ்விபத்தால், ஆலையில் பணியாற்றி வந்த 100க் கணக்கான தொழிலாளர்களில் சுமார் 50 பேர் காயமடைந்தனர். கோடையின் அதீத வெப்பத்தால், பட்டாசுகள் வெடித்து இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த விபத்துக்கு காரணம், உரிய பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாத பட்டாசு ஆலைகளுக்கு, எந்தவித ஆய்வும் இல்லாமல் உரிமம் வழங்கியது தான் என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
விருதுநகர் மாவட்டத்தில் பல ஊர்களில் பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதி வாழ் மக்களில் பெரும்பாலானோரின் வாழ்வாதாரமே பட்டாசு ஆலைகளில் வேலை செய்வதுதான். சாத்தூர் அருகிலுள்ள சிவலிங்கபட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட விபத்தால், பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்துச் சிதறி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது வேலை பார்த்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் யாருக்கும் தெய்வாதீனமாக எந்தவித பாதிப்பும் இந்த விபத்தால் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விதிமுறைகளின்படி பட்டாசு ஆலை நடைபெறுகிறதா? என எந்தவித ஆய்வும் செய்யாமல் உரிமம் வழங்குவதால் தான், பட்டாசு ஆலைகளில் இதுபோன்ற விபத்துக்கள் தொடர்கதையாக நடக்கிறது.
எந்த துறையை எடுத்தாலும் லஞ்சமும், ஊழலும் கொடிகட்டி பறக்கிறது. விபத்து நடக்கும்பொழுது மட்டும் பட்டாசு தொழிற்சாலைகளை பரபரப்பாக ஆய்வு செய்வதும், கடுமையான விதிமுறைகளை கடைபிடிப்பதைப் போன்ற போலி தோற்றத்தை மக்களிடத்தில் காட்டி ஏமாற்றுவதுமே இந்த அரசின் வாடிக்கை என மக்கள் பேசுகிறார்கள்.
No comments:
Post a Comment