வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி உட்பட பல பிரபலங்களின் நடிப்பில் நேற்று வெளியான படம் "மாசு என்கிற மாசிலாமணி.
இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சூர்யாவின் நடிப்பும், வெங்கட் பிரபுவின் திரைக்கதை அமைப்பும் ரசிகர்களை கவர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு விஜய் படத்தின் பாடல்கள் மற்றும் பி.ஜி.எம்களை பயன்படுத்தி இருக்கிறார். அதேபோல் அஜித் நடித்த 'ஆரம்பம்', 'வீரம்' உள்ளிட்ட படங்களின் வசனங்கள் மற்றும் தீம் மீயூசிக்கையும் சில காட்சிகளில் உபயோகப்படுத்தி இருக்கிறார் வெங்கட்பிரபு .
தற்போது இது அஜித் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. ஏன் இதில் என்ன கோபம்..? என்றால், 'கத்தி' படத்தின் பின்னணி இசையினை சூர்யா கத்தியை எடுக்கும் காட்சியிலும், 'வீரம்' பின்னணி இசையினை 'நான் கடவுள்' ராஜேந்திரன் அறிமுக காட்சியிலும் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.
அதே போல சூர்யா, பிரேம்ஜி இருவரும் கப்பல் படை அதிகாரிகளாக வரும் காட்சியில் சூர்யாவின் பெயர் (ஜெகதீஷ்) மற்றும் பிரேம்ஜியின் பெயர் 'விநாயக் மகாதேவ்' என வருவது போல காட்சிகள் அமைத்திருப்பார்வெங்கட்பிரபு .
இதனால் அஜித் ரசிகர்கள் " எப்படி இயக்குநர் வெங்கட்பிரபு , ஒரு காமெடியனுக்கு அஜித் பெயர் மற்றும் பின்னணி இசை, நாயகனுக்கு விஜய் பெயர் மற்றும் பின்னணி இசையை உபயோகப்படுத்தலாம்?" என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே போல விஜய் ரசிகர்கள் பலரும் அஜித் ரசிகர்களை கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
No comments:
Post a Comment