ஹாலிவுட் படங்கள் என்றாலே அதன் வசூலைப் பற்றி கேட்கவேண்டியதில்லை. நம்ம ஊர் படங்கள் ஒரு நாளில் ரூ.10 கோடி ரூபாய் வசூலை பெரிதாக பேசும் நேரத்தில் அவர்கள் சாதரணமாக ரூ.50, 60 கோடிகளை வசூலித்து செல்வர்.
ஆனால், அப்படங்களுக்கு அவர்கள் போட்டும் பட்ஜெட் ஆனது, நம்ம ஊர் பெரிய ஹீரொக்களின் பெரிய பட்ஜெட் படங்களுக்கு 10 மடங்கு அதிகமாக இருக்கும். ஹாலிவுட்டின் ஆக்ஷன், ரொமான்ஸ், அனிமேஷன் என அனைத்து வகையான படங்களுக்கும் ரசிகர்கள் உலகமெங்கும் உண்டு. அதுவும் குறிப்பிட்ட சில படங்கள் தொடரச்சியாக வெளிவரும், அப்படிப்பட்ட படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
தொடர்புடைய செய்திகள்: 5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்த ஃபியூரியஸ் 7..!
அப்படியொரு படம் தான் சென்ற மாதம் (ஏப்ரல் 2) வெளியான ’ஃப்யூரியஸ்7’ படம். ’ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ்’ பட வரிசையின் ஏழாவது பாகமான இப்படம் இதுவரை உலகளவில் ரூ.7000கோடிகளை வசூலித்து உள்ளது.
அதில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது இந்தப் படம்.
இப்படத்தில், மறைந்த நடிகர் பால் வாக்கர், வின் டீசல், ஜேசன் ஸ்டாதம், டுவைன் ஜான்சன், லூட கிறிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment