Monday, 1 June 2015

55 கோடி ரூபாய்க்கு கரண்ட் பில்!!? என்ன கொடுமை சார் இது!!


ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒருவர் தனது வீட்டின் கரண்ட் பில்லை பார்த்து அதிர்ந்து போய்விட்டார். அப்படி எவ்வளவு என்று கேட்கின்றீர்களா?? ரூ.55கோடி!!
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத். இவர், ராஞ்சியில் உள்ள கட்ரு பகுதியில் இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு வெயில் கொளுத்தி எடுத்த போதிலும், வீட்டில் ஏ.சி.யை பயன்படுத்தியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுமட்டுமின்றி தினமும் 7 முதல் 8 மணிநேரம் பவர் கட் வேறு!! இந்நிலையில் இவரது வீட்டிற்கு கரண்ட் பில் ரூ.55 கோடி என வந்தது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பில்லைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பிரசாத் புகார் அளித்ததை தொடர்ந்து இரு ஊழியர்களை பணி நீக்கம் செய்து அம்மாநில மின்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இது எழுத்துப்பிழையாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் இதனை சும்மா விடப்போவதில்லை என பிரசாத் கூறியுள்ளார். மேலும், மின்துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment