Saturday, 6 June 2015

இணையத்தில் பரவும் வீடியோ: கங்கனா பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்ட லேடி காகா


அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி “லேடி காகா” (lady gaga). இவர் மேடையேறினால் போதும் அங்கிருக்கும் மொத்த கூட்டத்தையும் எழுந்து நின்று துள்ளல் ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு அசத்தலாய் ஆடிக்கொண்டே பாடவும் செய்வார்.
இவரது ஆல்பங்கள் உலக நாடுகளில் பல வசூலில் சாதனைகளை படைத்து வருகின்றன. வித்தியாசமான ஆடைகள் அணிந்து, பாப் பாடல் பாடுவதில் மிகவும் பிரபலமான இவர் தன் முதல் பியானோ பாடலிசையை 13 வயதில் எழுதி, 14 வயதில் பொது மேடைகளில் பாடத் தொடங்கினார். அன்று முதல் இன்றுவரை உலகப்புகழ் பெற்ற பாப் பாடகியாக விளங்கி வருகிறார்.
இவர் நம்மூர் நடிகை கங்கனா ரணாவத் நடித்த இந்திப்பாடலுக்கு குத்தாட்டம் போட்டால் எப்படி இருக்கும்? என்று ஒரு ரசிகர் யோசித்துள்ளார். கடந்த வாரம் வெளியான ’தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்’ திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது பலரும் அறிந்த தகவல்.
அந்த படத்தில் வரும் Ghani Bawri என்ற குத்தாட்டப் பாடலுக்கு லேடி காகா நடனமாடினால் எப்படி இருக்கும் என்று ஒரு சிந்தித்த அந்த ரசிகர்(!!) தனது எடிட்டிங் திறமையால் லேடி காகாவை கங்கனாவின் பாடலுக்கு கச்சிதமாக ஆட வைத்துள்ளார்.
யு-டியூபில் வைரலாக பரவி வரும் லேடி காகா வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

No comments:

Post a Comment