டாம் க்ருஸ் நடிக்கும் ‘ மிஷன் இம்பாசிப்பில்: முரட்டு தேசம் (Mission: Impossible Rogue Nation) படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியிட்டுள்ளது. Paramount Pictures நிறுவனம். இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வெளியாகும் இப்படம் மிஷன் இம்பாசிப்பில்: முரட்டு தேசம் என்று தமிழில் வெளியாகவுள்ளது.
IMFஐ அழிக்க திட்டமிடும் ஒரு சமூக விரோத கும்பலை அழிக்க முற்படுகின்றனர் ஈத்தன் மற்றும் அவரது அணியினர். தங்களுக்கு மிக கடினமான இந்த போட்டியில் எப்படி வெல்கிறார்கள் என்பதை அதிரடி, சாகச ஸ்டன்ட் காட்சிகளுடன் திரைப்படம் விவரிக்கிறது. இப்படத்தில் சைமன் பெக், ஜெரமி ரென்னர், அலெக் பால்ட்வின் மற்றும் ரெபேக்கா ஃபெர்குசன் ஆகியோருடன் இணைந்து ‘ஈத்தன் ஹன்ட்’ என்ற ஸ்பெஷல் ஏஜென்ட் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் டாம் க்ருஸ்.
மிஷன் இம்பாசிப்பில் பட வரிசையில் ஐந்தாம் பாகமாக வரும் இப்படத்தை கிறிஸ்டஃபர் மெக்குவாரி எழுதி இயக்குகிறார். மிஷன் இம்பாசிப்பில்: முரட்டு தேசம் திரைப்படத்தை Paramount Pictures, Bad Robot, ஸ்கை டான்ஸ் மற்றும் TC புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்தியாவில் இப்படத்தை Viacom18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
No comments:
Post a Comment